செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெயருக்கு பின்னால் குடும்பப்பெயரை சேர்த்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Dec 12, 2024 IST | Murugesan M

இஸ்லாமியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால், தங்கள் இந்து குடும்பப் பெயர்களைச் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கள் மூதாதையருக்கு மரியாதை செய்வதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இது பயன்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எங்கே இந்த அதிசய செயல் நடந்துள்ளது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறிய கிராமம் டெஹ்ரி ஆகும். இது, சுமார் 5000 இந்துக்கள் வாழும் ஒரு இஸ்லாமிய கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 7000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

இப்போது இந்த கிராமம், இந்தியாவையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்திருக்கிறது. திடீரென்று ஒரு புதிய போக்கு இக்கிராமத்தில் உருவாகியுள்ளது.

Advertisement

டெஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 70 இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களுடன் 'பிராமண' குடும்பப்பெயர்களைச் சேர்த்துள்ளனர். அதே சமயம், மீண்டும் தாங்கள் இந்து மதத்துக்குத் திரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்து குடும்பப் பெயர்களைச் சேர்த்து கொண்ட அனைவரும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். மேலும், இந்துமுறைப்படி, கோயிலுக்குச் சென்று, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். புனித குரானை பின்பற்றினாலும், கிராம கோவில் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நௌஷாத் அகமது தனது மகளின் திருமண பத்திரிக்கையில், தனது பெயரை நௌஷாத் அஹ்மத் துபே என்று குறிப்பிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதே கிராமத்தில், நௌஷாத் அஹ்மத் துபேவின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் இர்ஷாத் அகமது என்பவரும், தனது பெயருக்குப் பின்னால், பாண்டே என்பதைச் சேர்த்திருக்கிறார். இப்போது அவர், இர்ஷாத் அகமது பாண்டே என்று அழைக்கப் படுகிறார்.

நௌஷாத், இர்ஷாத் போலவே, பலரும் தங்கள் பெயர்களுடன் மிஸ்ரா, பாண்டே, திவாரி போன்ற குடும்பப்பெயர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்த புதிய பழக்கம், இவ்வூரில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கி இருக்கிறது.

தாங்கள் அனைவரும் பல தலைமுறைகளுக்கு முன் இஸ்லாமியராக மதம் மாறிய வரலாறை தெரிந்து கொண்டதாகவும், உண்மையான வம்சாவளியைப் போற்றும் வகையில், குடும்பப் பெயர்களை இப்போது சேர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வம்சாவளியைப் பற்றி தெரிந்து கொண்டபின், தனது அசல் குடும்பப்பெயரான 'துபே' என்பதை என் பெயருடன் வைக்க முடிவு செய்ததாக கூறியுள்ள நௌஷாத், இப்போது பசு பராமரிப்பாளராக சேவை செய்து வருகிறார். தன்னை தவிர, தம் குடும்பத்தில் வேறு யாரும் துபே என்ற பெயரை சேர்க்கவில்லை என்றும் நௌஷாத் கூறியுள்ளார்.

இதேபோல், அப்துல்லா ஷேக் இப்போது அப்துல்லா ஷேக் துபே ஆகியிருக்கிறார். முகமது குஃப்ரான் இப்போது தாக்கூர் குஃப்ரான் எனப் பெயர் வைத்துள்ளார். சயாத் என்ற குடும்பப்பெயர் கொண்ட இஸ்லாமியர்கள், இப்போது சாண்டில்யா என்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, இக்கிராமத்தில், பல இஸ்லாமிய ஆண்கள், பிற பிராமண குடும்ப பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கியதோடு, பசுக்களை மேய்க்கத் தொடங்கியுள்ளனர்.

டெஹ்ரி கிராமத் தலைவர் ஃபர்ஹான், தனது மூதாதையர் அனைவரும் இந்துக்கள் என்பதை 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்ததாகவும், இந்து பாரம்பரியத்தில் இருந்ததை அறிந்து பெருமை படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்தோ அல்லது வளைகுடாவில் இருந்தோ தாங்கள் யாரும் வரவில்லை என்பதால், ஷேக், பதான், சையத் மற்றும் மிர்சா போன்ற குடும்பப்பெயர்கள் தங்களின் அசல் குடும்பப்பெயர்கள் அல்ல என்று இப்போது தான் புரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், எந்த சூழ்நிலையில் தம் முன்னோர்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்று தெரியவில்லை . ஆகவே, அசல் குடும்பப்பெயர்களை எப்பொழுதும் பயன்படுத்தி, இந்து சகோதரர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி நிம்மதியாக வாழ நினைப்பதாகவும் கூறியுள்ளனர்.

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக, இந்து குடும்ப பெயர்களைச் சேர்ப்பது தேசத்தைப் பலப்படுத்தும் என்று, முதன்முறையாக இந்து குடும்பப் பெயர் சேர்த்துக் கொண்ட நௌஷாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATURFEDHindu surnamesancestorsTehriIslamic villageBrahmin’ surnamesMAINuttar pradeshmuslims
Advertisement
Next Article