பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் நேரில் விசாரணை!
11:25 AM Jan 22, 2025 IST
|
Murugesan M
பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
Advertisement
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூர் கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி பட்டியல் இனத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய தேவேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கை களத்தூர் காவல் நிலைய தலைமை காவலர், உதவி ஆய்வாளர் ஆகியோர் வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
Advertisement
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், மணிகண்டனின் மனைவி மற்றும் பெற்றோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Next Article