பெரம்பலூர் - பேரூராட்சி திமுக துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு!
07:59 AM Mar 29, 2025 IST
|
Ramamoorthy S
பெரம்பலூரில் பூலாம்பாடி பேரூராட்சி திமுக துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
துணை தலைவராக பதவி வகித்து வரும் திமுக-வை சேர்ந்த செல்வலட்சுமி, பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு சென்று சேரவேண்டிய நலத்திட்ட பணிகளையும் செய்ய விடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி தலைமையிலான உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement