பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
05:23 PM Apr 04, 2025 IST
|
Murugesan M
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
அரசின் அனுமதியைப் பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை அரசு நிதியில் தொடங்கியதாகக் கூறி, துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
Advertisement
Advertisement