செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெரிய கண்மாயை முறையாக தூர்வாராத அதிகாரிகள்!

04:13 PM Nov 27, 2024 IST | Murugesan M

ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கின் 5 ஷட்டர்களும் முறையாக பராமரிக்கப்படாததால் நீர் வீணாக வெளியேறி வருகிறது.

Advertisement

ராமநாதபுரம் பெரிய கண்மாய் 12 கிலோ மீட்டர் நீளமும், 200 ஏக்கர் பரப்பளவையும் கொண்டது. இந்த கண்மாயில் 618 மில்லியன் லிட்டர் கன அடி நீரை சேமிக்க முடியும்.

இந்த கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் நீரை தேக்கி வைக்கும் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயின் தென் கலுங்கின் 5 ஷட்டர்களில் ஏற்பட்ட இடைவெளியால் நீர் வீணாக வெளியேறி வருகிறது.

Advertisement

வினாடிக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 கன அடி நீர் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
'Tamil Nadu Alert'MAINOfficials who did not properly remove the big eyesore!rain
Advertisement
Next Article