செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெரு நாட்டில் அவசரநிலை பிரகடனம்!

06:54 PM Sep 20, 2023 IST | Abinaya Ganesan

எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவநிலை மாற்றங்கள் நிகழ்வதால், பெரு நாட்டில் 544 மாவட்டங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக் காடுகள் நிரம்பியதாகும். தற்போது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேல்புரத்தில் அதிகப்படியான வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இதனால், அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பருவகால மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அதிக வறட்சி அல்லது அதிக மழைபொழிவு மாறி மாறி நிகழ்கிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன.

இந்த நிகழ்வைத்தான் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் "எல் நினோ" என்று அழைக்கின்றனர். இச்சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று வானிலை நிபுணர்களும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெரு நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையை செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்டது.

Advertisement

அந்த அறிக்கையில் "எல் நினோ" தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என்று எச்சரித்திருக்கிறது. இதனால், அங்கு பெரும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே, "எல் நினோ" நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Advertisement
Tags :
544 districtsEL NINOemergencyMAINPeru
Advertisement
Next Article