பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ - பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சூரசம்ஹார நிகழ்வையொட்டி பூத்த பிரம்ம கமலம் பூவை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர்.
Advertisement
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு வி க நகர் பகுதியில் வசிப்பவர் மார்கபந்து ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் இவர் வீட்டில் பிரம்ம கமலம் பூ செடி வைத்து வளர்த்து வருகிறார்.
இமய மலைகளில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ நள்ளிரவு 10 மணியளவில் மலர தொடங்கி 11 மணிக்கு இதழ்களை விரித்து அழகாக பூத்திருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது பிரம்மகமலம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
பிரம்மா ஆசீர்வாதம் செய்ததால் இந்த பூ பூலோகத்தில் தோன்றியதாகவும் மேலும் கேட்ட வரத்தை அளிக்கும் பிரம்ம கமலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூவிற்கு மார்கபந்து குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ சூரசம்ஹார தினத்தில் ஒரே செடியில் 5 பூ பூத்தது. பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.