பேரவையில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிய முதல்வர் ஸ்டாலின் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!
03:07 PM Jan 08, 2025 IST | Murugesan M
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளதாக, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, அறிவித்த அடுத்த நாளே திமுக எப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியது என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
ஆளும்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர்கள் ஏன் ஒ பதற்றத்துடன் பேட்டியளித்தார்கள் என்றும் வினவினார்.
Advertisement
Advertisement