செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பேராசிரியரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம்!

03:02 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக அக்கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 'சொல்' ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் திமுக எம்பி ஆ. ராசா பங்கேற்று உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பேராசிரியர் ரேவதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அதில், கல்லூரி அனுமதி அளித்த பின்னரே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக தவறான காரணத்தைக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டார்.

Advertisement
Tags :
Cancellation of the order suspending the professor: Madras High Court!madras high courtMAIN
Advertisement