செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு சுமார் ரூ.522 கோடி ஒதுக்கீடு!

05:03 PM Apr 05, 2025 IST | Murugesan M

பேரிடர் நிவாரண நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி, பீகார் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அம்மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரத்து 280 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

அதில் பீகாருக்கு சுமார் 588 கோடி ரூபாயும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு 136 கோடி ரூபாயும் பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு சுமார் 33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Approximately Rs. 522 crore allocated for Tamil Nadu as disaster relief fund!FEATUREDMAINமத்திய அரசு
Advertisement
Next Article