பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணி - லிப்ட் கொடுத்து காரில் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்!
காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணிக்கு லிப்ட் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
புதுச்சேரியின் பட்டினச்சேரி பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் காரில் சென்றுள்ளார்.
அப்போது, காரைக்காலில் மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், வெயிலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி கவனித்த அவர், தனது காரில் அழைத்து சென்று நடுக்கலாம் பேட் கிராமத்தில் உள்ள வீட்டில் கர்ப்பிணியை இறக்கிவிட்டுள்ளார்.
மேலும், அவரது வீட்டிற்கு சென்று மகப்பேறு மருத்துவ அட்டைகளை பார்வையிட்டதுடன், குடும்ப பின்னணி, பொருளாதரா நிலை, வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.