பொங்கலுக்கு பின் வேலை நிறுத்த போராட்டம் - சிஐடியு தொழிற் சங்கம் அறிவிப்பு!
10:44 AM Jan 10, 2025 IST | Murugesan M
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பொங்கலுக்கு பின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சிஐடியு தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தின் முன் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
Advertisement
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த சிஐடியு தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் பொங்கலுக்கு பின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபது குறித்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement