செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்!

03:06 PM Jan 17, 2025 IST | Sivasubramanian P

பொங்கல் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கக் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் முறையிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு பணம் வழங்கினால் மகிழ்ச்சிதான் என கூறினர்.

Advertisement

ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு என்றும், ரொக்க தொகை வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுப்பு தெரிவித்தனர்.

Advertisement
Tags :
madras high courtMAINpolicy decision of government.Pongal gift packagePongal gift package 2000
Advertisement
Next Article