பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் முன்பதிவு - சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19ஆம் தேதிகளில் இரவு 11 மணிக்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும்,
மறுமார்க்கமாக ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு சென்னை சென்டரலுக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து ஜனவரி 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும், மறுமார்க்கமாக, ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.