செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் பண்டிகை! : 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

12:52 PM Jan 06, 2025 IST | Murugesan M

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பிற   இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வருகின்ற 10, 11, 12, 13 ஆகிய நாட்களுக்கு 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யபட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் குறிப்பிட்ட இந்த நாட்களில் கூடுதலாக 5736 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .

Advertisement

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது .

கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர் திருத்தணி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன்,  திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

மேலும், பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்கள் வசதிக்காக 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 15 ஆயிரத்து 800 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Advertisement
Tags :
104 special buses run!FEATUREDMAINPongal festivalPongal festival! : 14
Advertisement
Next Article