பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற குடும்ப அட்டைதாரர்கள்!
10:29 AM Jan 10, 2025 IST | Murugesan M
இடைத்தேர்தல் அறிவிப்பால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது.
Advertisement
மேலும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடைகளில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Advertisement
Advertisement