செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் - பிரேமலதா விஜயகாந்த்!

01:25 PM Jan 18, 2025 IST | Sivasubramanian P

பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரோடின் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய், 2021ல் 2,500 ரூபாய், 2022ல் ஆயிரம் ரூபாய், கடந்த 2023ல் ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில்,  பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது, ரொக்க பணம் வழங்கப்படவில்லை.

மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வங்களில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக  சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2006ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDhappy pongalMAINpongalpongal celebrationPongal festivalpongal festival bonuspongal giftpongal gift boxPongal gift packagepongal gift package distributionpongal gift public opinionpongal gifts 2025pongal packageration shops timings for pongal gift packagers. 1000 pongal gift packagesthai pongal
Advertisement
Next Article