பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமே! : நீதிபதிகள் கேள்வி
பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ வெல்லம் வழங்க வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகையான ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தக்கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, அவ்வாறு வழங்கினால் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத வங்கி கணக்குகளில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுவிடுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, மகளிர் உரிமைத்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகையில், இதுவும் சாத்தியம்தான் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.