செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் - ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

10:00 AM Jan 18, 2025 IST | Sivasubramanian P

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். பெரும்பாலும் தமது சொந்த கார்கள் மூலம் பொதுமக்கள் சென்னை திரும்புவதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்ட போதிலும், ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கனரக வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement

இதனிடையே பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்தனர். அப்போது, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் அந்தியோதயா ரயில் நெல்லை ரயில் நிலையத்தில் நின்றது.

இதையடுத்து, முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இருக்கைகள் கிடைக்காததால் கழிவறை செல்லும் பாதை, லக்கேஜ் வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்திலும் பொதுமக்கள் நிரம்பி வழிந்தனர். பண்டிகை காலங்களில் அதிக அளவிலான முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
chennai national highway traffic jamchennai trafficchennai traffic jamFEATUREDGST Road traffice jamHeavy traffic jamheavy traffic jam at perungalathurMAINNellaiPerungalathur GST Road.perungalathur trafficPerungalathur.Pongal festivaltraffictraffic jamtraffic jam in chennaitraffic jam videotraffice jam
Advertisement
Next Article