செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொதுத்தேர்வு - தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு!

11:22 AM Feb 07, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன.

இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணிவரை தடையற்ற மின் வினியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தேர்வு மையத்துக்கு மின்வினியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க தடையில்லாத வகையில் மின்வினியோகம் வழங்கவும், பராமரிப்புக்கான மின்தடையை மேற்கொள்ளாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
electricity boardMAINpublic examination.tamilnaduuninterrupted power supply
Advertisement