பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத துணை முதலமைச்சர் உதயநிதி!
பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத துணை முதலமைச்சர் உதயநிதி மேடையில் இருந்தபடியே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
காலை ஏழு மணிக்கு தொடங்க வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துணை முதலமைச்சர் உதயநிதி வருவதில் தாமதம் ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனதால் பொதுமக்கள், வீரர்கள் உற்சாகம் இழந்தனர். இதையடுத்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழியை ஏற்றனர். இதனைதொடர்ந்து போட்டி நேரத்தை கடந்து ஒரு மணி நேரம் கழித்து வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதனை கண்டு கொள்ளாத அவர் மேடையில் இருந்தபடியே போட்டியை தொடங்கி வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.