செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி - அண்ணாமலை புகழாரம்!

05:52 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும்  பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து அ.வல்லாளப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக பா’ஜக மாநில தலைவர்  அண்ணாமலை  கலந்துகொண்டு பேசியதாவது :

பிரதமர் மோடியை அழைத்து வர ஆசை.  பிரதமர் மோடி சார்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்துள்ளார். இந்த பகுதியை சேர்ந்த முக்கிய அம்பலகாரர்களை  டெல்லி சென்று மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்ததாகவும் , அவர் உறுதியளித்தப்படி டங்ஸ்டன் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Advertisement

மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல என்றும், 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம்  என்றும், பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை  என்றும்,  சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.  உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? எனறும் அண்ணாமலை கேள்வி  எழுப்பினார்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி  இந்த திட்டத்தை ரத்து செய்ததாக  தெரிவித்தார். மாநில அரசுக்கு பயந்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றும், மக்களின் அன்புக்கு அடிபணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசு வழக்கு போட்டதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமடாக  மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Advertisement
Tags :
annamalaiFEATUREDMaduraiMAINMinister Kishan Reddytungsten project canceled.
Advertisement