பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட அபுதாபி இந்து கோயில்!
அபுதாபியில் உள்ள இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் சுமார் 700 கோடி ரூபாயில் செலவில் இந்து கோயில் கட்டப்பட்டது. ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப் பரப்பில் கட்டப்பட்ட இந்த கோயிலை பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி திறந்து வைத்தார். 5000 பேர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இந்த கோயிலை சுற்றிப்பார்க்க, சாமி தரிசனம் செய்ய உலகளவில் முன்பதிவு செய்து இருந்த விஐபி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக இக்கோவில் திறக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அயோத்தியில் கட்டபட்டு உள்ள ராமர் கோயிலை பின்பற்றி அதேபோல் நகரா வடிவமைப்பில் அபுதாபி கோயிலும் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏறத்தாழ மூன்றரை கோடி இந்தியர்கள் உள்ள நிலையில் அனைத்து மத வழிபாட்டுக்கு அதரவு அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த கோயிலை தானமாக வழங்கியுள்ளது.