செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

03:15 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக உறுப்பினர்கள், புதிதாகக் கட்டப்பட்ட நகர்மன்ற கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நகராட்சியில் குப்பைகள் அள்ளுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.

Advertisement

மேலும், பாதாளச் சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை நடத்த விடமாட்டோம் எனவும்  திமுக உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று, அதிமுக உறுப்பினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அதிமுக நகர்மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார்.

Advertisement
Tags :
Irregularity in tax collection in Ponneri Municipality: DMK members allege!MAINதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
Advertisement