பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் - பொய் வழக்குகளை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
கடலூர் மாவட்டம் வேப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு எந்த மீட்பு பணியையும் செய்யவில்லை என தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரே மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேர் வீசப்பட்ட விவகாரத்தில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அம்பேத்கர் நினைவு நாளில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை தூய்மை பணியாளருக்கு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவிக்கின்றார். பட்டியல் சமூகம் என்றால் கழிவு நீரை அகற்ற வேண்டும் என இந்த அரசு நினைக்கிறதா என்றும் அவ்ர கேள்வி எழுப்பினார்.பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்துவதை திராவிட மாடல் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.