பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் - பிரதமர் மோடி புகழாரம்!
09:30 AM Dec 27, 2024 IST
|
Murugesan M
பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் இழந்துள்ளது. அவருக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன்சிங்.
நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article