செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொறுப்பற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

11:38 AM Jan 08, 2025 IST | Murugesan M

பொறுப்பற்ற முறையில் பேசுவதை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் 7ஆம் தேதி  நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்டு தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.

கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வகளாகும். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், இதர கம்யூனிஸ்டு கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவைகளை ஆ.ராசா சார்பு நிலை தவிர்த்து கற்றறிந்து பேச வேண்டும்.

Advertisement

“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்து விட்டது” “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கலைஞர் “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும்.

இதில் திமுகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் “யாகாவாராயினும் நாகாக்க”  என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
communist ideologyDMK Deputy General Secretary A. RazaFEATUREDformer Minister A. RazaMAINMutharasan condemen
Advertisement
Next Article