பொள்ளாச்சி அருகே சாலையில் கிடந்த ரூ. இரண்டரை லட்சம் - காவல்துறையில் ஒப்படைத்த இளைஞர்!
12:55 PM Nov 29, 2024 IST
|
Murugesan M
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சாலையில் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Advertisement
தேவம்பாடி வலசை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், பணி நிமித்தம் காரணமாக இருசக்கர வாகனத்தில், தமது ஊரிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.அப்போது, ஜமீன் முத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே பணம் கிடந்துள்ளது.
அதை எடுத்து வந்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
Next Article