For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி - தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

10:25 AM Nov 15, 2024 IST | Murugesan M
போடி பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி   தாமதமாக சென்ற அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பரமசிவன் மலைக்கோயிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அதிகாரி தாமதமாக வந்ததால், பக்தர்கர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரமசிவன் மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வரும் நிலையில், கொடிமரம் வைக்கும் உத்ஸவம் நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி, தேக்கு மரத்தாலான 33 அடி உயர கொடிமரம் போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடிமரம் ஏற்றுவதற்கு தயாரான நிலையில், அறநிலையத் துறை அதிகாரி அன்னக்கொடி 3 மணிநேரம் தாமதமாக வந்ததால், பக்தர்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடிமரத்துக்கான பள்ளத்தில் பதிக்கப்படும் தங்க காசு, செப்பு தகடுகள், நவரத்தின கற்கள் எடை போடப்பட்டு, முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டதாக அறநிலையத் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement