போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி - வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை!
06:45 PM Mar 30, 2025 IST
|
Ramamoorthy S
பஞ்சாபில் போதைப்பொருள் கடத்திய தம்பதியின் வீட்டை போலீஸார் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.
Advertisement
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஜஸ்வீந்தர் கெளரும் அவரது கணவரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். அண்மையில் கூட அவர்களது வீட்டிலிருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.
இருப்பினும், அந்தத் தம்பதி தொடர்ச்சியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதால், அவர்களது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து போலீஸார் தரைமட்டமாக்கினர்.
Advertisement
Advertisement