செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போதைப்பொருள் புழக்கம் - கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் சோதனை!

02:00 PM Nov 10, 2024 IST | Murugesan M

கோவையில் அதிகரிக்கும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாணவர்கள் தனியாக தங்கி உள்ள அறைகள் மற்றும் விடுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது. அதில் ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர், 25 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள 7, 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கோவை புறநகர் பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் மாணவர்களுக்கும், அந்த கும்பல் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி , டி.எஸ்.பி-க்கள், ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார், செட்டிபாளையம், மதுக்கரை, K.G சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கி உள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement
Tags :
special police raided dormitoriesMAINcoimbatoreincreasing movement of drugsstudents hosel raided
Advertisement
Next Article