செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போதைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது!

05:04 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை மடிப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மடிப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கொக்கைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஜே தொழில் செய்யும் பிரதீப் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்த போது குழுவாக சேர்ந்து வடசென்னையில் இருந்து போதைப்பொருள் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் பிரதீப் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், வேளச்சேரியை சேர்ந்த அஸ்வின் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஷாபுதீன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 23 கிராம் கொக்கைன் மற்றும் 4 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
4 arrested for selling drugs!
Advertisement