For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போதையில்லா தமிழகம் - இந்து அன்னையர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பேரணி!

02:15 PM Jan 05, 2025 IST | Murugesan M
போதையில்லா தமிழகம்   இந்து அன்னையர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பேரணி

சென்னை மணலியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மணலி ஐயப்பன் கோயில் சந்திப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற பேரணியை இந்து முன்னனி மாநில பொதுசெயலாளர் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட பெண்கள், மதுவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

Advertisement

செண்டை மேளம் முழங்க அணிவகுத்த பெண்கள் பேரணி, அண்ணாசிலை அருகே முடிந்தது. அதைத் தொடர்ந்து, இந்து அன்னையர் முன்னனி மாவட்ட தலைவர் காயத்ரி, பொதுசெயலர் குணவதி தலைமையில், கொள்கை விளக்க பொது கூட்டம் நடந்தது.

இதில், பெருகி வரும் நவ நாகரிகம் செல்போன் பயன்பாடு சமூக வலைதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் நிலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பெண் நிர்வாகிகள் பேசினர். இந்நிகழ்ச்சியில் , ஹிந்து முன்னனி மாநில செயலர் மனோகர் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement