போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர்.
Advertisement
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3 பள்ளி மாணவர்கள் நீண்ட நேரமாக மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை எழுப்ப முயன்றும் மயங்கிய நிலையிலேயே இருந்ததால் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவர்கள் 3 பேரும் படம் பார்க்க வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களும் இருந்துள்ளது. தொடர்ந்து மூன்று சிறுவர்களிடம் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிப்படையும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர்.