செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போய் வாருங்கள் அப்பா... தமிழ் கற்றதனால் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் தமிழ் பேசுகிறேன் - தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!

06:41 AM Apr 09, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை என்றும்,  தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த தந்தை குமரி அனந்தன்  இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார் என அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை.என்று கூப்பிடும் என் அப்பாவின்கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டுவாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார்.

Advertisement

அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்..பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Advertisement
Tags :
FEATUREDKumari AnanthanKumari Ananthan passed awayMAINTamilisai Soundararajan
Advertisement