போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - திமுக பிரமுகரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!
07:56 AM Mar 15, 2025 IST
|
Ramamoorthy S
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் திமுக பிரமுகரை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisement
சம்பை கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை சந்தானம் என்ற திமுக பிரமுகர் போலி ஆவணங்களை கொடுத்து அபகரித்துள்ளார்.
இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த பெண் புகாரளித்த நிலையில், ஆளுங்கட்சி பிரமுகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர்.
Advertisement
Advertisement