செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை!

04:40 PM Mar 17, 2025 IST | Murugesan M

இந்தியாவிற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா பயன்படுத்தினால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களைக் கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

மேற்கண்ட 4 சட்டங்களுக்குப் பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறியவுடன் பழைய 4 சட்டங்களும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
fake passportMAINUp to 7 years in prison for using a fake passport or visa!
Advertisement
Next Article