போலீசார் எச்சரித்தும் ரோடு ஷோ நடத்திய நடிகர் அல்லு அர்ஜுன் - தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் நடிகர் அல்லு அர்ஜுன் ரோடு ஷோ நடத்தியதுதான் திரையரங்கில் பெண் உயிரிழந்ததற்கு காரணம் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின்போது திரையரங்கில் பெண் உயிரிழந்ததது குறித்து எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, திரையரங்குக்கு புஷ்பா- 2 படக்குழுவினரை அழைத்துவர போலீசார் அனுமதி மறுத்தபோதும் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு சென்றதாக தெரிவித்தார்.
பின்னர் நேராக திரையரங்குக்குள் செல்லாமல் ரோடு ஷோ நடத்தியதுதான், பெண் உயிரிழக்கக் காரணமென்றும் அவர் குறிப்பிட்டார். பெண்ணின் உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என குற்றம் சாட்டிய அவர், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்