செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

11:59 AM Apr 10, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

நிலமோசடி வழக்கு தொடர்பாக வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

சென்னை அபிராமபுரம் ஆர்கே மடம் சாலையை சேர்ந்த கார்த்திகேயன் அதே பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார். இவரது வீட்டிற்கு வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் நிலமோசடி வழக்கில் கார்த்திகேயன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளனர்.

பின்னர் தனிப்படை போலீசார் கார்த்திகேயனை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு வருமாறு அழைத்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கார்த்திகேயன் மயங்கி விழுந்ததை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.‌ இந்நிலையில் போலீசார் தள்ளிவிட்டதால் கார்த்திகேயன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Advertisement
Tags :
AbiramapuramChennaiice company owner diedMAINpolice enquiryRK Matham Road
Advertisement