செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்!

03:13 PM May 06, 2024 IST | Murugesan M

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை தற்போது பார்க்கலாம்...

Advertisement

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 97 புள்ளி நான்கு ஐந்து சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

97 புள்ளி நான்கு இரண்டு சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன.

Advertisement

இதனைத்தொடர்ந்து, 97 புள்ளி ஏழு ஐந்து சதவீதத்துடன் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை மாவட்டம் 96 புள்ளி ஒன்பது ஏழு சதவீதமும், விருதுநகர் மாவட்டம் 96 புள்ளி ஆறு நான்கு சதவீதமும் பெற்றுள்ளது.

நெல்லை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் 96 புள்ளி நான்கு நான்கு சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 96 புள்ளி மூன்று ஒன்பது சதவீதம் மாணவர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 96 புள்ளி ஒன்று பூஜ்யம் சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96 புள்ளி பூஜ்யம் ஏழு சதவீதத்துடன் தென்காசி மாவட்டம் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் 95 புள்ளி 9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் 92 புள்ளி தொண்ணூற்று இரண்டு புள்ளி இரண்டு எட்டு சதவீதம் பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் 91 புள்ளி எட்டு ஏழு சதவீதமும், திருவள்ளூர் 91 புள்ளி 2 சதவீதமும், நாகை மாவட்டம் 91 புள்ளி ஒன்று ஒன்பது சதவீதமும், திருவண்ணாமலை மாவட்டம் 90 புள்ளி நான்கு ஏழு சதவீதமும் பெற்று கடைசி நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

Advertisement
Tags :
MAINPlus 2 district wise pass rate in general exam!
Advertisement
Next Article