மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
02:14 PM Mar 21, 2025 IST
|
Murugesan M
திருவாரூரில் மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
பெண் உதவியாளரின் கணவர் இறந்துவிட்டதால் மறுமணம் செய்து கொண்டுள்ளார். கருவுற்ற அவர், மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், திருமணமானதற்கு ஆதாரம் இல்லை எனக்கூறி மகப்பேறு விடுப்பு வழங்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.
Advertisement
அப்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் ஆணை பிறப்பித்தனர்.
Advertisement