மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி - கோப்பையை கைப்பற்றி இந்தியா அசத்தல்!
09:55 AM Nov 21, 2024 IST | Murugesan M
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீனாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிரணி கைப்பற்றியது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன.
Advertisement
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்திய அணியை எதிர்த்து சீனா பலப்பரீட்சை நடத்தியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக இந்திய மகளிரணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சீன அணி நடப்பு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement