மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றன.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாங்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அமிலியா கெர் 43 ரன்களும், புரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர்.
பின்னர் விளையாடி தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே தடுமாறத் தொடங்கியது. முன்னணி வீராங்கனைகள் பலர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.