மகளிர் ஹாக்கி இந்தியா லீக் : ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்!
01:12 PM Jan 27, 2025 IST | Murugesan M
மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலா நகரில் நடைபெற்றது.
4 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சூர்மா கிளப் மற்றும் ஓடிசா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ஒடிசா வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Advertisement
Advertisement