மகாத்மாவின் உயரிய போதனைகளை பின்பற்றி அவருக்கு புகழ் சேர்ப்போம் - அண்ணாமலை
09:50 AM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அகிம்சையும், வாய்மையும், அறவழியும் போதித்த மகாத்மா காந்தி அவர்கள் நினைவு தினமான இன்று, தேசத்துக்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு என, மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்கு புகழ் சேர்ப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement