மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
06:57 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ரயில் விபத்தில் உயிர்கள் பறிபோனதை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement