மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங். கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, மும்பையில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று கூறிய அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதால், காஷ்மீரில் இடஒதுக்கீடு முடங்கும் என்றும், அந்த சட்டப் பிரிவை பிரதமர் மோடி நீக்கியதன் மூலம் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.