செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி - அண்ணாமலை வாழ்த்து!

03:12 PM Nov 23, 2024 IST | Murugesan M

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் மோடிக்கு  தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணியை அமோக வெற்றிக்கு இட்டுச் சென்றதற்காக பாட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு தழிழக பாஜக சார்பில்  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நமது  பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீர்க்கமான முடிவை அளித்துள்ளனர் மக்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

Advertisement

மாநிலத்தின் வளர்ச்சி , விளிம்புநிலை மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடைய மஹாயுதியின் சிறந்த வெற்றி அமைந்துள்ளது.

ஜனநாயகத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு,  ஊழல், அதிகார வெறி, பிரித்தாளும், சந்தர்ப்பவாத ஐ.என்.டி.ஐ கூட்டணியை முற்றிலுமாக மகாராஷ்டிரா மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Advertisement
Tags :
annamalai greetingsFEATUREDmaharastra election resultMAINPM Modi
Advertisement
Next Article