மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி - சந்திரசேகர் பவான்குலே தலைமையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
04:15 PM Nov 24, 2024 IST | Murugesan M
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகாயுதி மற்றும் காங்கிரஸ் இடம்பெற்ற மகா விகாஸ் அகாடி இடையே போட்டி இருந்தது. தேர்தல் முடிவுகளின்படி, பாஜக போட்டியிட்ட 149 இடங்களில் 132 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
Advertisement
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே தலைமையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அந்த அணியின் தலைவர் அஜித் பவார் ஆலோசனை மேற்கொண்டார்
Advertisement
Advertisement