செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பட்னாவீஸ்!

05:09 PM Dec 04, 2024 IST | Murugesan M

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.

Advertisement

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதலமைச்சரை தேர்வு செய்வதில் கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை மும்பை ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸ் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது பட்னாவீஸ் முதலமைச்சராவதற்கான ஆதரவு கடிதத்தை கூட்டணி கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

Advertisement

நிகழ்ச்சியில், பாஜக மேலிட பார்வையாளர்கள் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி மூத்த தலைவர் பிரஃபுல் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளை மும்பையில் முதலமைச்சர் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் பங்கேற்பர் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
Bhadnavis claimed the right to form a government in Maharashtra!bjp won in maharastraFEATUREDMAIN
Advertisement
Next Article